சில வருடங்களுக்கு முன் திடீரென சினிமாவை விட்டு விலகி பிரஜ்ஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். பிறகு காங்கிரசோடு அக்கட்சியை இணைத்தார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். கடந்த தேர்தலில் சீமாந்திரா பகுதியின் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசார கமிட்டி தலைவராக செயல்பட்டார். ஆனால் ஆந்திராவில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
இதனால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே 149 படங்களில் சிரஞ்சீவி நடித்துள்ளார். அடுத்து அவர் நடிப்பது 150வது படம் என்பதால் நல்ல கதையை தேர்வு செய்வதில் தீவிரமாக இருக்கிறார். பிடித்தமான சிறந்த கதையுடன் வரும் கதாசிரியருக்கு ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த பணத்தை பெற தெலுங்கு கதாசிரியர்கள் முண்டியடிக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி