‘குக்கூ’ படத்திற்கு பிறகு ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடித்து வரும் புதிய படம் ‘திருடன் போலீஸ்’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
நான் நடிக்கும் ‘திருடன் போலீஸ்’ படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் ‘ஜீன்ஸ்’ படம் முதல் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து கொடுத்தவர். ‘திருடன் போலீஸ்’ கதையை என்னிடம் சொன்னதும், அவரையும், அவரோட கதையும் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதற்காகவே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
‘குக்கூ’ படத்தில் நான் நடித்திருந்த கதாபாத்திரத்தை எல்லோரும் பாராட்டினர். அந்த படம் முடிவடைந்த உடனே இதில் நடிக்க ஒப்புக்கொண்டதால், அந்த கதாபாத்திரத்திலிருந்து வெளிவர ரொம்பவுமே சிரமப்பட்டேன். நான் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் மேலும் 2 தோற்றங்களில் நடித்திருக்கிறேன். போலீஸ் கதாபாத்திரத்திற்காக இயக்குனர் எனக்கு தொப்பை வேண்டும் என்று சொன்னார். தொப்பையை வளர்ப்பதற்காக நிறைய சாப்பிட்டு, தொப்பையை கொண்டு வந்தேன். தற்போது சற்று கூடுதலாக தொப்பை வளர்ந்துவிட்டது.
இந்த படத்துக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். ஐஸ்வர்யா ஒரு திறமையான டான்ஸர். இதுவரையிலான படங்களில் அவர் அவ்வளவாக நடனம் ஆடியது கிடையாது. ஆனால், இப்படத்தில் அவருக்கு டான்ஸ் ஆடுவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எனக்கு சுத்தமாக நடனமே வராது. அப்படியிருந்தும் என்னிடம் நன்றாக வேலைவாங்கி நடனத்தை அமைத்துக் கொடுத்தார் தினேஷ் மாஸ்டர். என்னுடைய படங்களில் நடிக்கும் எந்த கதாநாயகியுடனும் நான் பேசுவதே இல்லை. யுவன்சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள பாடல்கள் ரொம்பவும் அழகாக வந்திருக்கிறது. என்னுடைய படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. கூடிய விரைவில் ஆடியோவை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி