மும்பை:-1966ம் ஆண்டு முதல் நடித்து வருகிறவர் நடிகை ரேகா. இவர் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஆவார். எவர்கிரீன் ஹீரோயின் என்று அழைக்கப்படுகிறவர், 2010ம் ஆண்டு சைத்தான் படத்தில் நடித்ததோடு சினிமாவைவிட்டு கொஞ்சம் விலகினார். இப்போது 4 வருட இடைவெளிக்குப் பிறகு ஃபித்தூர் என்ற படத்தில் நடிக்கிறார்.
புராண கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தில் அவர் அரசியாக நடிக்கிறார். அபிஷேக் கபூர் இயக்குகிறார். ஆதித்யாராய் கபூர், காத்ரீனா கைப் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். கேரக்டர் பற்றி சொன்னதும் அந்த கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு ஒரு அரசியாகவே படப்பிடிப்புக்கு வந்தார் என்று அபிஷேக் கபூர் தனது பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி