இவ்விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசுகையில், இந்த படம் க்ரைம் கதையில் உருவாகியிருக்கிறது. எனது பேனரில் உருவாகும் கதைகளைப்போன்று வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த கதைக்கு பொருத்தமான டைட்டீல் யாழி என்று இயக்குனர் வைத்திருந்தார். ஆனால், அதை பதிவு செய்யச்சென்றபோது ஏற்கனவே இன்னொருவர் அதை பதிவு செய்து வைத்திருந்தார்.அதனால், நாங்கள் சரபம் என்று மாற்றினோம். சரபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. தமிழில் அதற்கு சிங்கப்பறவை என்று பொருள்படும். மேலும், இந்த படத்துக்கு யு சான்றிதழ் கண்டிப்பாக கிடைக்காது என்பதால் பட்ஜெட்டை குறைத்து, 29 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்தோம்.
படத்தில் நடித்த நவீன்சந்திரா, சலோனி, நரேன் ஆகியோர் பல நாட்கள் இரவு 2 மணி நேரம் மட்டுமே தூங்கியபடி ஓய்வில்லாமல் நடித்துக்கொடுத்தனர்.
மேலும், இந்த படத்தின் கதைக்கு ஏற்ற நடிகை பல மாதங்களாக தேடினோம். அந்தவகையில், 120 நடிகைகளுக்கு பிறகு 121வதாக கிடைத்த மும்பை சலோனிதான் இந்த கதைக்கு பொருத்தமாக இருந்தார். அந்த வகையில், இந்த படத்தில் நடிப்பதற்கு அவருக்கு கொடுத்த சம்பளத்தை விட நடிகை தேடுவதற்காக நாங்கள் செலவு செய்த தொகைதான் அதிகம் என்கிறார் சி.வி.குமார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி