செய்திகள்,திரையுலகம் வடகறி (2014) திரை விமர்சனம்…

வடகறி (2014) திரை விமர்சனம்…

வடகறி (2014) திரை விமர்சனம்… post thumbnail image
மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்யும் ஜெய்க்கு, சுவாதியைப் பார்த்ததும் அவரைக் காதலிக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது.நல்ல செல்போன் வைத்து இருப்பவர்களைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க என்று ஆர்.ஜே.பாலாஜி கொடுக்கும் ஒரு அறிவுரையால், சுவாதி தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த மொபைலை வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறார் ஜெய்.

ஆனால், வீட்டு சூழ்நிலை காரணமாக அவரால் விலையுயர்ந்த செல்போனை வாங்க முடியாமல் போகிறது. இந்நிலையில் டீக்கடை ஒன்றில் அனாதையாக கிடக்கும் ‘ஐஃபோன்’ ஒன்று ஜெய்யின் கைக்கு வருகிறது. தன்னிடம் வந்த ஐஃபோனை சம்பந்தப்பட்டவரிடமே கொடுத்துவிடலாம் என ஜெய் நினைக்கும்போது, நண்பர்கள் அவர் மனதை மாற்றி அந்த ஐஃபோனை அவரையே வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். அவருக்கும் அது சரி எனப்படவே அதிலிருக்கும் சிம் கார்டை எடுத்துவிட்டு, தன் சிம்மைப் போட்டு அந்தப் ஐஃபோனை பயன்படுத்தத் தொடங்குகிறார். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மனம் மாறும் ஜெய், சம்பந்தப்பட்டவரிடமே ஐஃபோனை ஒப்படைத்துவிடலாம் என நினைத்து, பழைய சிம்மை மீண்டும் மாற்றுகிறார். அப்போது வரும் ஒரு ஃபோன் காலுக்கு பதிலளிக்கும் ஜெய்க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடிக்கின்றன.

தனக்கு சொந்தமில்லாத பொருளை தன்வசப்படுத்திக் கொள்வதால் ஜெய்க்கு வரும் பிரச்சனைதான் என்ன? அதிலிருந்து ஜெய் மீண்டாரா இல்லையா? என்பதே ‘வடகறி’ படத்தின் மீதிக்கதை….ஒரு ஃபோனால் நாயகன் படும் கஷ்டங்களையும், அதன் பிறகு ஒரு ‘ஐஃபோன்’ வந்ததும் அவன் செய்யும் பந்தாக்களையும் சுவாரஸ்யமாக முதல் பாதியில் படமாக்கியிருக்கிறார்கள். ஆனாலும், இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் கதைக்குள்ளே செல்கிறது ‘வடகறி’ திரைப்படத்தைக் கொண்டு செல்கிறார். இயக்குனர் சரவண ராஜன்.முதல் பாதியில் படத்தை நகர்த்துவதற்கு அழகிய சுவாதியும், ஆங்காங்கே சிரிப்பூட்டும் ஆர்.ஜே.பாலாஜியும் தான் பயன்பட்டிருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும் ஜெய், அதிலிருந்து மீள்வதற்காக எடுக்கும் எந்தக் காரியமும் பரபரப்புடன் படமாக்கப்படவில்லை. வில்லன் இவராகத்தான் இருக்கும் என எளிதில் யூகித்துவிட முடியாமல் நாயகன் ஜெய்க்கு அந்த விஷயம் க்ளைமேக்சில்தான் தெரிய வருவது.

அப்பாவிக் காதலன் வேடமென்றால் ஜெய்க்கு சொல்லவே தேவையில்லை. தான் விரும்பும் சுவாதி வேறொருவரைக் காதலிக்கிறார் என நினைத்து, சரி அவரின் தோழியிடமாவது ‘ஐ லவ் யூ’ சொல்லலாம் நினைத்து அருகில் சென்று, கடைசி நேரத்தில் மனதை மாற்றி சுவாதியைக் காதலிப்பதாக தோழியிடம் சொல்லுமிடத்திலும், வில்லன்களிடம் அடிவாங்கிவிட்டு முகத்தில் ரத்த காயத்துடன் இருக்கும் ஜெய்யைப் பார்த்து, ‘என்னது கன்னத்துல லிப்ஸ்டிக்’ என அப்பாவியாக சுவாதி கேட்கும் இடத்திலும் ஜெய்யின் செயல்திறன் சூப்பர்! கொஞ்சம் சண்டைக் காட்சிகளிலும் தன திறமையை காண்பித்து இருக்கிறார்.சுவாதி அழகான பெண்ணாக வந்து ஜெய்யைப் படுத்தி எடுக்கிறார். சுவாதி தனக்கு கிடைத்த கதாப்பாத்திரத்தை திறம்பட செய்து ரசிகர்களைக் கவர்கிறார்.ஆரம்பத்தில் கொஞ்சம் போரடித்தாலும், போகப்போக படத்திற்கு சுவாரஸ்யம் கொடுப்பதில் ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. இவர்களைத் தவிர வெங்கட் பிரபு, கஸ்தூரி, மிஸா கோஷல், அருள்தாஸ் என ஆங்காங்கே சில பிரபலங்கள் வந்து போகிறார்கள். ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வந்து ஆட்டம் போட்டிருக்கிறார் ‘கவர்ச்சிக் கன்னி’ சன்னி லியோன்.
படத்தின் திரைக்கதை இப்படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. மேலும் ஜெய் மற்றும் சுவாதி இடம்பெற்ற காட்சிகள் அற்புதம். பின்னணி இசை சரியில்லை. தேவையான விஷயங்களை சரியான விகிதத்தில் திரைக்கதையில் கலந்திருந்தால் ரசிகர்களுக்கு ருசித்திருக்கும் விதமாக இருந்திருக்கும் ‘வடகறி’.

மொத்தத்தில் ‘வடகறி’ சுவை…….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி