மும்பை:-இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீராட் கோஹ்லியுடன் அனுஷ்கா சர்மா சமீபகாலமாக சுற்றிக்கொண்டு திரிகிறார்.அவர் எந்தெந்த அயல்நாடுகளுக்கு பேட்டைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாலும் அவரும் பட அதிபர்களுக்கு டேக்கா கொடுத்து விட்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவார். அங்கே வீராட் விளையாடும் அழகை ஆடியன்சோடு அமர்ந்து ரசிப்பவர், அவ்வப்போது கிளாப்ஸ், விசில் என்று தனது ரசிப்புத்தன்மையை வெளிப்படுத்தி கொண்டேயிருப்பார்.
இதையடுத்து அவர்கள் லவ் ஜோடிகளாட்டம் வெளிநாட்டு கடற்கரைகளில் சுற்றிய போட்டோக்களெல்லாம் இணையதளங்களில பரவி பரபரப்பு கூட்டின.இந்நிலையில், சமீபத்தில் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் இலியானாவுடன் இணைந்து நடித்ததில் இருந்து அவர் பக்கம் தாவி விட்டார் வீராட். அனுஷ்கா சர்மாவைப்போன்று விளையாட்டு தளங்களுக்கு செல்லாமல் ஸ்டார் ஹோட்டல்களுக்கு விசிட் அடித்து வீராட்டுடன் நட்பு வளர்க்கிறாராம் இலியானா. இந்த செய்தி மும்பை மீடியாக்களால் புகைந்தபோதும், வீராட்டை விலகாமல் ஜோடியாக வலம் வருகிறாராம் இலியானா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி