அதன் காரணமாகவோ என்னவோ, டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தனுஷை பற்றி சிம்பு ரசிகர்களும், சிம்பைவுப் பற்றி சிம்பு ரசிகர்களும், ஏடாகூடமாக ஸ்டேட்டஸ் போட்டு சண்டைபோட்டுக்கொள்கிறார்கள்.தனுஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதுகுறித்து சிம்பு ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும், கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில்லா பட்டதாரி படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தால் சிம்பு நடித்த காளை படத்தின் பார்ட் 2 போல் இருக்கிறது என்று சிம்பு ரசிகர்கள் சொல்ல, கொதித்துப்போயிருக்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.
அதோடு வேலையில்லா பட்டதாரி டிரெய்லரை யுடியூபில் இதுவரை 2.25 லட்சம் பேர் பார்த்திருப்பதாக தனுஷ் ட்வீட் பண்ணியதையும் செமத்தியாய் நக்கலடித்து வருகின்றனர் சிம்பு ரசிகர்கள். தன் நண்பர் தனுஷை தன் ரசிகர்கள் கழுவி ஊற்றுவதை கர்ம சிரத்தையாய் கவனித்துக்கொண்டிருக்கிறார் சிம்பு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி