சென்னை:-தமிழில் ஹிட்டான ‘யாமிருக்கே பயமே’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் அதன் இயக்குனர் டீகே.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக அதன் இரண்டாம் பாகத்தை நான் எழுதவில்லை.
அந்த கதை உருவானபோது அந்த கான்செப்டில் எத்தனை பாகம் வேண்டுமானாலும் கொண்டு வரலாம் திரைக்கதை தான் முக்கியம். இரண்டாம் பாகத்தின் கதையும் தயாராக இருக்கிறது. தயாரிப்பாளரும் தயாராக இருக்கிறார். ஆனால் நான் அடுத்து இயக்கப்போவது வேறொரு கதையைத்தான். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. அதற்கு பிறகுதான் யாமிருக்க பயமேவின் இரண்டாம் பாக்தை இயக்கும் யோசனை உள்ளது. என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி