இந்திய சினிமா ஒளிப்பதிவாளராகப் புகழ் பெற்று விளங்கும் சந்தோஷ் சிவன் ஒரு இயக்குனர், தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றார். இவருக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தற்போது இவர் பிரிட்டிஷ் திரைப்பட கல்லூரியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். உலக திரைப்படங்களில் புகழ்பெற்ற அலெஜாண்ட்ரோ கொன்சாலஸ் இனாரிட்டு, ஜாக்குவஸ் ஆடியார்ட், கிளின்ட் மன்செல் போன்ற பிரபலங்கள் இந்த வகுப்புகளின் சிறப்பு விருந்தினர்களாக அலங்கரித்துள்ளனர்.
வகுப்புகளில் நடைபெறும் செமினார்களைப் பதிவு செய்யும் பிரிட்டிஷ் திரைப்பட கல்லூரி அதனை இணையதளத்தில் வெளியிடுகின்றது. கடந்த வருடம் பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டார்.
வரும் ஜூலை 11ஆம் தேதி இந்தியாவிலிருந்து கிளம்பும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அங்கு சென்று தனது திரைத்துறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி