செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு துறை உத்தரவு!…

கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு துறை உத்தரவு!…

கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு துறை உத்தரவு!… post thumbnail image
லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் செயல்படும் கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிய காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அங்கு குளிர்பான உற்பத்தி செய்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டபோது விதித்திருந்த நிபந்தனைகளை அந்நிறுவனம் மீறியுள்ளதே இப்படி உத்தரவிடுவதற்கு முக்கிய காரணமாகும்.

தங்களது உத்தரவின் படி அந்த உற்பத்தி நிலையம் மூடப்பட்டுவிட்டதாக, அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலரான ஜே.எஸ்.யாதவ் கூறினார். நிலத்திடியிலிருந்து உறிஞ்சப்பட்ட நீரை விட இரு மடங்கு நீரை நிலத்தில் மீண்டும் பாய்ச்ச ஏற்பாடு செய்ய அந்நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி