செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!…

ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!…

ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியா தன் உள்நாட்டு தேவைகளுக்காக தினமும் சுமார் 40 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறது. சவுதி அரேபியா நாட்டில் இருந்துதான் அதிகப்படியான கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது.சவுதி அரேபியாவுக்கு அடுத்தப்படியாக ஈராக் நாட்டில் இருந்து அதிக கச்சா எண்ணையை இந்தியா வாங்கி வருகிறது. ஈராக்கில் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் உள்நாட்டு போரால் அங்கிருந்து கச்சா எண்ணை பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக் தினமும் 2 லட்சம் டன் கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்து வந்தது.

இதில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரத் தொடங்கியுள்ளது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 120 டாலர் என்ற அளவில் உள்ளது. இது 125 டாலராக உயரும் என்று கூறப்படுகிறது.இதன் காரணமாக எல்லா நாடுகளிலும் அரசுக்கு சுமையும், பொது மக்களை பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை ஒரு டாலர் உயர்ந்தாலே இந்தியாவில் மத்திய அரசின் மானியம் ரூ.7500 கோடி கூடுதலாகி விடும். அந்த வகையில் ஈராக் உள்நாட்டு போரால் இந்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மேலும் பெட்ரோலியம் பொருட்களுக்கான மானிய சுமையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2008–ம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 147 அமெரிக்க டாலராக உயர்ந்தது.ஈராக் உள்நாட்டு போர் காரணமாக மீண்டும் அதே அளவுக்கு கச்சா எண்ணை விலை உயரும் என்று தெரிகிறது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு பட்ஜெட் தயாரித்து வரும் நிலையில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் மத்திய நிதி அமைச்சகத்தின் முயற்சிகளுக்கு இடையூறாக மாறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி