மும்பை:-இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் நடிகர் தனுஷ் ‘சமிதாப்’ என்ற இந்திபடத்தில் நடித்து வருகிறார்.இந்தபடத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷராஹாசனும் நடிக்கிறார்.இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராம் செய்கிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஆர்.பால்கி இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படம் குறித்து அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் தளத்தில் கால்பந்து போட்டிகளில் நெய்மர் எப்படி ஒரே போட்டியில் உலகப்புகழ் பெற்றாரோ அதுபோன்று நடிகர் தனுஷ் ஒரே படத்தில் இந்தியா முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறார் என பாலிவுட் சூப்பர் ஸ்டார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் தேசிய விருது வாங்கி புகழ்பெற்றிருந்தாலும், அவரது புகழ் தற்போது தன்னுடன் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படமான சமிதாப் என்ற படம் ரிலீஸ் ஆனால், இந்தியா முழுவதும் பரவி விடும் என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சவுத் நெய்மர் என தனுஷை புகழ்ந்து உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி