இதில் சித்தார்த், பரத் இருவரும் முன்னணி நடிகர்களாகி விட்டனர். மேலும், தமன் தமிழ், தெலுங்கு படங்களில் தற்போது முன்னணி இசையமைப்பாளராகி விட்டார்.அந்த 5 பேரில் ஒருவரான மணிகண்டன் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் ஓடவில்லை. அதனால் பின்னர் படவாய்பே இல்லாமல் இருந்து வந்த மணிகண்டன், இப்போது வில்லனாக உருவெடுத்துள்ளார்.
முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படங்களில் நடித்த ஹாரிஸ் நாயகனாக நடிக்கும காதல் 2014 என்ற படத்தில் வில்லனாகியுள்ள அவர், தனக்கு எப்படியும் ஹீரோ வேடம் கிடைக்கும் என்று இதுவரை தனது உடம்பை ஸ்லிம்மாக பராமரித்து வந்த மணிகண்டன், இப்போது வில்லனுக்காக உடல் எடையை அதிகரித்துக்கொண்டிருக்கிறார்.
அதோடு, தனது நண்பர்களான சித்தார்த், பரத், நகுல் ஆகியோரிடம் நீங்கள் நடிக்கும் படத்தில் எனக்கு வில்லன் வேடம் வாங்கிக்கொடுங்கள் என்றும் உரிமையோடு சிபாரிசு கேட்டு வருகிறார் மணிகண்டன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி