செய்திகள்,திரையுலகம் கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத நடிகை!…

கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத நடிகை!…

கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத நடிகை!… post thumbnail image
சென்னை:-தனுஷ்-நயன்தாரா நடித்த ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன்.அதையடுத்து சுசீந்திரன் இயக்கிய, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது செல்வபாரதி இயக்கியுள்ள, ‘காதலைத்தவிர வேறொன்றுமில்லை’ என்ற படத்தில் ‘சாட்டை’ யுவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை செல்வபாரதியே தயாரிப்பதால் பெரிய அளவில் சம்பளமும் கேட்காத சரண்யா மோகன், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு எந்தவித ஸ்பெசல் கவனிப்புகளையும் எதிர்பார்க்கவில்லையாம்.யூனிட் நபர்கள் சாப்பிடும் உணவுகளையே சாப்பிட்டாராம்.

முக்கியமாக, கத்திரி வெயில் கொளுத்தும் இடங்களில் படப்பிடிப்பு நடந்தபோதும் கேரவன் இருந்தால்தான் ஸ்பாட்டுக்கு வருவேன் எனறு சொல்லாமல், தனது உதவியாளரை குடைபிடித்துக்கொள்ளச்சொல்லி நடித்திருக்கிறார். மதிய இடைவேளைகளில்கூட ஓய்வு என்று மேக்கப் அறையில் சென்று குட்டித்தூக்கம் போடாமல், ஸ்பாட்டிலேயே நின்று நடித்துக்கொடுத்திருக்கிறார்.சரண்யாமோகனின் இந்த அருமை பெருமைகளைப்பற்றி அப்படத்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்தார் செல்வபாரதி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி