இப்படம் பெரும்வெற்றியடைந்ததை அடுத்து இபப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஆர்வமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் நான் மிகப்பெரும் பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்க விரும்புகிறேன். அப்படத்தின் முண்ணனி கதாபாத்திரங்களில் அஜீத் மற்றும் விஜய் நடித்தால் மிகச்சிறப்பாக இருக்கும். இதற்கு ஒரே வழி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் தான் என்று தெரிவித்தள்ளார். இது போன்று மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பல்வேறு தகவல்கள் வெனிவந்த வண்ணம் உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி