சென்னை:-நடிகை நயன்தாரா ஏற்கனவே கதாநாயகியை முக்கிய கேரக்டராக வைத்து தயாரான பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக வந்தார். தெலுங்கில் ‘அனாமிகா’ பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற படத்திலும் நடித்தார். இதுவும் கதாநாயகியை முக்கியமாக வைத்து பின்னப்பட்ட கதை.
தற்போது இந்த வரிசையில் பேய் படமும் அமைந்துள்ளது. இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. பயமுறுத்தும் வகையில் தயாராகும் இந்த பேய் படத்தில் நயன்தாரா தெய்வீக சக்தி கொண்ட பெண்ணாக வருகிறார். நயன்தாரா நடிக்கும் முதல் பேய் படம் இதுவாகும். எனவே இதில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். இதில் நயன்தாராவுடன் நெடுஞ்சாலை படத்தில் நாயகனாக நடித்த ஆரி முக்கிய கேரக்டரில் வருகிறார். புது டைரக்டர் அஸ்வின் இயக்குகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி