இதில் சாய்னா கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்கலாம் என்று தெரிகிறது. படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்து சாய்னாவிடம் காட்டிய பிறகு சாய்னா நெய்வால் தான் தனது கேரக்டரில் நடிக்க சரியான நபர் தீபிகாதான் என்று மகேஷ் பட்டிடம் கருத்து தெரிவித்தாராம்.
காரணம் தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனே தேசிய பேட்மிட்டன் வீரர். தீபிகாவும் பள்ளி, கல்லூரி காலத்தில் பேட்மிட்டன் வீராங்கனையாக இருந்தவர். மாநில அளவில் விளையாடி இருக்கிறார். அதனால்தான் சாய்னா, தனது கேரக்டருக்கு தீபிகா பொருத்தமானவர் என்று கூறியிருக்கிறார். இது பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி