ஆனால் அறுவை சிகிச்சை செய்ய அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இல்லாததால் சிறுமியை உடனடியாக பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி டாக்டர்கள் கூறினார்கள்.இது குறித்து சிறுமியின் பெற்றோர் தொகுதி எம்.எல்.ஏ.வும், டாக்டருமான தேசாய் டிப்பா ரெட்டியிடம் தகவல் கூறினார்கள்.
உடனே அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்குள்ள டாக்டர்கள் உதவியுடன் சிறுமி ஸ்ரீ வள்ளிக்கு அறுவை சிகிச்சை செய்தார். சிறுமியின் அழுகிய குடல்வால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இப்போது சிறுமி நலமாக உள்ளார்.சிறுமியின் உயிரை காப்பாற்றிய எம்.எல்.ஏவை அனைவரும் பாராட்டினர்.தொகுதி மக்களுக்காக சேவை செய்ய எப்போதும் நான் தயாராக உள்ளேன் என்று தேசாய் டிப்பா ரெட்டி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி