தனது படத்தை முடித்து கொடுக்க அஞ்சலிக்கு உத்தரவிடுங்கள் என இயக்குனர், தயாரிப்பாளர் சங்கங்களில் களஞ்சியம் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார். ஆனால் அஞ்சலியை தொடர்பு கொள்ள முடியவில்லை.இந்நிலையில் ஜெயம்ரவியை வைத்து சுராஜ் இயக்கும் படத்தில் காஜல்அகர்வால், அஞ்சலி இருவரையும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியானது.இதற்கு களஞ்சியம் எதிர்ப்பு தெரிவித்தார்.
அஞ்சலியால் தனக்கு 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் எனது படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களில் அஞ்சலியை நடிக்க அனுமதிக்க கூடாது என்றும் டைரக்டர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினார். டைரக்டர் சங்கமும் அஞ்சலிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.அஞ்சலி நடிக்கும் படங்களை திரையிடுவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரவும் களஞ்சியம் தயாரானார்.இதையடுத்து ஜெயம்ரவி படத்தில் இருந்து அஞ்சலி விலக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி