சால்வேடர்:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியுடன் ஜெர்மனி மோதியது. ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மானிய வீரர்கள் கிரிஸ்ட்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியை தங்களது அதிரடி ஆட்டத்தால் திணறடித்தனர்.
போர்ச்சுகல் அணியை கலங்கடிக்கும் விதமாக ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் ஆட்டம் தொடங்கிய எட்டாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து ஜெர்மனியின் கணக்கை துவக்கி வைத்தார். அடுத்தடுத்து 3 ‘ஹாட்ரிக்’ கோல்களை அடித்து அசத்திய அவர், ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை ஜெர்மனி வீழ்த்த முக்கிய காரணமாக விளங்கினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி