லக்னோ:-உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பெண்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு உதவி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் இலவச ஹெல்ப்லைனை (1090) ஆய்வு செய்த அகிலேஷ் யாதவ், வரும் கல்வியாண்டு முதல் பள்ளி-கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யும்படி தலைமை செயலாளரிடம் கூறினார்.பெண்கள் தொடர்பான குற்றங்களை முறையாக கண்காணித்து, உடனடியாகவும் முழு உணர்வுடனும் விசாரிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி