‘அலாதீன்’ என்ற இந்திப் படத்தில் நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து ‘ஹவுஸ்புல், மர்டர் 2, ஹவுஸ்புல் 2’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார் ஜாக்குலின். பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ள இவர் பல பத்திரிகைகளின் அட்டைப் படத்தை தனது கிளாமரான தோற்றத்தால் அலங்கரித்தவர்.இவரை 1970களில் இந்தித் திரையுலக கனவுக் கன்னியான ஜீனத் அமனுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் சல்மான் கான். நான் மிகவும் நேசிக்கும் ஒரே நடிகை ஜீனத் அமன்.
இவருடைய புகழையும் பெருமையையும் நெருங்கக் கூடிய அளவிற்கு இருக்கும் ஒரே நடிகையாக ஜாக்குலின் இருப்பார் என நான் நினைக்கிறேன். இவருக்கு படப்பிடிப்பு நேரங்களில் இந்தி எப்படி பேசுவது என்ற அடிப்படை விஷயங்கள் சிலவற்றை கற்றுக் கொடுத்திருக்கிறேன். படப்பிடிப்பில் லைட்மேன்களுடன் இந்தியில் பேசி அவர் இந்தி பேசுவதை விரைவில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.என்று சொல்கிறார் சல்மான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி