செய்திகள்,திரையுலகம் இனி ஐட்டம் டான்ஸ் ஆடமாட்டேன் என நடிகை வித்யா பாலன் அறிவிப்பு!…

இனி ஐட்டம் டான்ஸ் ஆடமாட்டேன் என நடிகை வித்யா பாலன் அறிவிப்பு!…

இனி ஐட்டம் டான்ஸ் ஆடமாட்டேன் என நடிகை வித்யா பாலன் அறிவிப்பு!… post thumbnail image
மும்பை:-‘டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ படங்கள் மூலம் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக இடம் பெற்று விட்டார் வித்யா பாலன். தற்போது ‘பாபி ஜாசூஸ்’ என்ற இந்திப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் பல வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார்.

ஜுலை மாதம் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த படத்திற்காக விளம்பரப்படுத்தும் வகையில் தனியாக பிளாக் ஒன்றை ஆரம்பித்துள்ளார் வித்யா பாலன். அதில் பாலிவுட்டில் நடக்கும் பல திரைமறைவு விஷயங்களை எழுதப் போகிறாராம். அந்த பிளாக்கிற்கு ‘பாபி கோ சாப் மாலும் ஹை’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதற்கான அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசும் போது வித்யாபாலன், திரைப்படங்களில், இனி ஐட்டம் டான்ஸ் ஆட மாட்டேன். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இனி என்னை நீங்கள் அம்மாதிரியான தோற்றத்தில் என்னைப் பார்க்க முடியாது,என பதிலளித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி