பில்கர் நகரில் மின்சாரம், குடிநீர், சாக்கடை பணிகள் முற்றிலும் முடங்கின. ஒமா ஹாலில் இருந்து பொது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
ஸ்டேன்டன், கமிங், வேயின் ஆகிய பகுதிகளில் பொது மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். ரோடுகள் மூடப்பட்டதால் பில்கர் பகுதியில் வாகனங்கள் ஓடவில்லை.
பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்ட மாயின. ரோடுகளில் இடி பாடுகள் சிதறி கிடந்தன. ரோட்டோரங்களில் வாகனங்கள் உடைந்து நொறுங்கி கிடந்தன.
இந்த சூறாவளிப் புயலுக்கு ஒருவர் பலியானார். 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி