மெரிபெல்:-பார்முலா ஒன் பந்தயங்களில் ஏழு முறை பட்டம் வென்றவரான மைக்கேல் சூமாக்கர் அவ்வப்போது பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பாறை ஒன்றின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதலுதவி சிகிச்சை அளித்தபோது அவர் சுயநினைவோடு இருந்ததாக அவரை காப்பாற்றியவர்கள் தெரிவித்த நிலையில் பின்னர், கிரெனோபில் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
விபத்துக்குள்ளானபோது சூமாக்கர் ஹெல்மெட் அணிந்திருந்தபோதிலும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் கோமா நிலைக்கு சென்றார். கவலைக்கிடமாக நிலையில் இருந்த அவர் தற்போது கோமா நிலையில் இருந்து மீண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டதாக அவரது செய்தி தொடர்பாளரான சேபைன் கேம் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி