சென்னை:-‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்த பூஜா குமார் மீண்டும் கமலுடன், ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’ படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், முதல் படத்தில் பாசிடிவ் ரோலில், பூஜாவை நடிக்க வைத்த கமல், இந்த இரு படங்களிலும் அவரை பக்கா வில்லியாக மாற்றி விட்டாராம்.
‘விஸ்வரூபம் 2’ படத்தில் பூஜாவின் வில்லி நடிப்பு கமலுக்கு திருப்தியை கொடுக்கவே, ‘உத்தம வில்லன்’ படத்தில் அவரை மனதில் வைத்து ஒரு அதிரடி வில்லி கதாபாத்திரத்தை உருவாக்கி விட்டாராம். இந்த படத்தில் ஒரு காட்சியில் கமலுக்கும், பூஜாவுக்கும் பயங்கரமான சண்டை காட்சியும் உள்ளதாம். இதில், அபாரமாக நடித்து படக் குழுவினரின் பாராட்டை பெற்றுள்ளார் பூஜா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி