நடிகர் கிருஷ்ணா அவரது மகன் மகேஷ் பாபு, இவரது மகனும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளான். ரஜினியின் நண்பரான மோகன் பாபு, அவரது மகன்கள், விஷ்ணு, மனோஜ், மற்றும் சிரஞ்சீவி அவரது தம்பிகள் நாகேந்திர பாபு, பவன் கல்யாண், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, உறவினர் அல்லு அரவிந்த், அல்லு அர்ஜுன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.இப்போது என்டிஆரின் பேரன்களில் ஒருவரும் பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமூரி மோக்க்ஷக்னாவை நடிகராக அறிமுகப்படுத்த பாலகிருஷ்ணா திட்டமிட்டுள்ளாராம்.
நடிகர் நாகார்ஜுனா அவரது இளைய மகன் அகிலை அறிமுகப்படுத்தும் சமயத்தில் பாலகிருஷ்ணாவும் அவரது மகனை அறிமுகப்படுத்த நினைப்பதை தெலுங்குத் திரையுலகம் போட்டியாகவே பார்க்கிறதாம். பாலகிருஷ்ணா மகனுக்காக பல கதைகளைக் கேட்டு ஒரு கதையை தேர்வு செய்து விட்டாராம். அநேகமாக, விரைவில் இது பற்றிய முறையான அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள். பாலகிருஷ்ணாவும் விரைவில் 100வது படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி