‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு 7 கோடிக்கும் மேல் சம்பளம் வழங்க பலரும் தயாராக இருந்தார்கள். ஆனால், அந்தப் படம் வெளிவருவதற்கு முன் சிவகார்த்திகேயன், இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் சிவகார்த்திகேயன். அப்போது சம்பளமாக ஒரு கோடி ரூபாய் மட்டுமே பேசப்பட்டு ஒப்பந்தமும் போடப்பட்டதாம்.தற்போது சிவகார்த்திகேயன் சம்பளம் உயர்ந்துவிட்ட நிலையில் லிங்குசாமி தரப்போ அப்போது ஒப்பந்தத்தில் போட்டபடி ஒரு கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக தருவோம் என்கிறார்களாம். இதைக் கேட்டு சிவகார்த்திகேயன் கடும் கோபத்தில் உள்ளாராம். தற்போதைய சூழ்நிலையில் படத்தின் வியாபாரத்திற்கேற்றபடி சம்பளமாகத் தரவேண்டும் என்று சிவகார்த்திகேயன் கேட்க அப்படியெல்லாம் தரமுடியாது என தயாரிப்பு நிறுவனம் கறாராக கூறி வருகிறதாம்.
இது சம்பந்தமாக இரு தரப்புக்கும் பேச்சு வார்த்தை நடந்த நிலையில் ஒருவருக்கொருவர் முட்டிக் கொண்டுதான் நிற்கிறார்களாம். பொதுவான சிலரும், திரையுலகில் வளர்ச்சிக்கேற்ப சம்பளத்தை மாற்றித் தருவதுதானே இயல்பு என்று எடுத்துச் சொல்லியும் லிங்குசாமி தரப்பு ஏற்க மறுக்கிறதாம்.சம்பளத்திற்குப் பதிலாக ஒரு காரையோ அல்லது ஏதாவது விலை உயர்ந்த பொருளையோ பரிசாக வேண்டுமானால் கொடுக்கலாம், சம்பளத்தை உயர்த்தித் தரமுடியாது என்பதைக் கேட்ட சிவகார்த்திகேயன் இனி இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் மூழ்கியிருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி