சென்னை:-ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கோச்சடையான் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விரைவிலேயே கோச்சடையான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் இயக்குனரும், ரஜினியின் இளைய மகளுமான சௌந்தர்யா சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் நீங்கள் நடிப்பதாக இருந்தால் யாருடன் ஜோடி சேர்வீர்கள் என்ற கேள்விக்கு நான் அஜித்தை மிகவும் வியந்து ரசிக்கிறேன். எனவே அவருடன் தான் ஜோடி சேர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ரஜினியின் படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்ற கேள்விக்கு “கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அப்பா நடித்த தில்லு முல்லு படம்தான் எனது ஆல் டைம் ஃபேவரைட் என்று அதில் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி