அரசியல்,செய்திகள் 90வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி!…

90வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி!…

90வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவின் 41–வது ஜனாதிபதி ஆக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவர் சீனியர் புஷ் என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது அவருக்கு 90 வயது ஆகிறது. தொடக்கத்தில் இவர் அமெரிக்க ராணுவத்தின் விமான படையில் பணியாற்றினார்.ராணுவ பாராசூட் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். முதன் முறையாக 2வது உலகப் போரின்போது இவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே, உயிர் தப்பிக்க பசிபிக் கடலில் பாராசூட் மூலம் குதித்தார்.

இதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது பிறந்தநாளின் போது பாராசூட்டில் இருந்த குதித்து வந்தார். அதன்படி தனது 75, 80 மற்றும் 85வயது பிறந்தநாளின் போது பாராசூட்டில் இருந்து குதித்தார்.கடந்த 85வது பிறந்தநாளின் போது குதித்த அவர் தனது 90–வது பிறந்த நாளின் போது மீண்டும் குதிப்பேன் என்று அறிவித்தார். தற்போது அவர் ‘பார்கின் சன்’ என்ற பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.

இன்று அவருக்கு 90வது பிறந்தநாளாகும். எனவே அவர் தெரிவித்தப்படி பாராசூட்டில் இருந்து குதிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எதிர் பாராத வகையில் தான் மைனி கடற்கரை பகுதியில் ஹெலிகாப்டரில் பறந்து அங்கிருந்து பாராசூட்டில் இருந்து குதிப்பதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார்.இந்த தகவலை ஜார்ஜ் டபிள்யூ புஷ்சின் செய்தி தொடர்பாளர் ஜிம் மெக்கிராத் தெரிவித்துள்ளார். இன்று அவர் 8வது தடவையாக பாராசூட்டில் இருந்து குதித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி