இது குறித்த இறுதி முடிவு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் கலந்தாலோசித்த பின் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் ஈராக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு விலை குறைப்பு கூடாது என வலியுறுத்துவதாக தெரிகிறது.ஈராக் நாடு தான் அதிக அளவு கச்சா எண்ணெயை சந்தைக்கு அனுப்புவதால், அங்கு நிலவும் அசாதாரண சூழல் எண்ணெய் விநியோகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. திடீரென சப்ளை குறைவு ஏற்பட்டால் விலை அதிகமாகும் சூழ்நிலை உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் உடனடியாக பெட்ரோலுக்கான விலை குறைப்பை அறிவிக்க முடியவில்லை என தெரிகிறது. எனினும் வரும் வாரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி