சென்னை:-கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பொங்கி வரும் காவேரி, அண்ணாநகர் முதல் தெரு உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், கொடுக்காப்புளி செல்வராஜ். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர், துணை நடிகர் ஏஜெண்டுகளின் தலைவராக இருந்தார்.
அவருடைய உடலுக்கு நடிகர் சங்க துணைத்தலைவர் கே.என்.காளை, துணைச்செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொடுக்காப்புளி செல்வராஜின் உடல் தகனம் இன்று காலை 8 மணிக்கு போரூர் சுடுகாட்டில் நடக்கிறது. அவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி மட்டும் இருக்கிறார். குழந்தைகள் இல்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி