சென்னை:-நயன்தாராவும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் ‘நண்பேண்டா’ படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடந்து வருகிறது. அங்கு கடந்த 10 நாட்களாக பொது இடங்களில் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. அதே கும்பகோணத்தில் நயன்தாராவும் சிம்புவும் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது.
இரண்டு படங்களுக்கும் மாறி மாறி கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா. சில நாட்கள் காலையில் ஒரு படத்திலும் மாலையில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதற்காக இரு படத் தரப்பும் இணைந்து பேசி ஷெட்யூலை முறைப்படுத்தி உள்ளனர்.
நயன்தாரா இல்லாதபோது அவர் இல்லாத காட்சிகளையும், அவர் இருக்கிறபோது அவரது காமினேஷன் காட்சிகளையும் படமாக்கிக் கொள்கிறார்கள்.இரண்டுமே ரொமான்டிக் காமெடி படம் என்பதால் பெரியதாக கெட்அப் சேன்ஞ் எதுவும் இல்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி