மும்பை:-தமிழில் விஜய் நடிப்பில் ஹிட்டடித்த துப்பாக்கி படம் ‘ஹாலிடே’ என்ற பெயரில் இந்தியில் வெளியாகியுள்ளது. அக்சய்குமார் நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது.
வெளியான 3 நாளில் 41 கோடியை வசூலித்துள்ளதாம் ஹாலிடே. சமீபகாலமாக சற்று எடை போட்டிருந்த அக்சய்குமார், இந்த படத்திற்காக ஒர்ஜினல் ராணுவ வீரர்களைப்போலவே தனது உடல்கட்டை எடை குறைத்து நடித்திருத்திருப்பவர், படத்தின் பரபரப்பான வெற்றியினால் உற்சாகத்தில் இருக்கிறாராம்.
இந்த சந்தோசத்தை அவருடன் சேர்ந்து கடந்த சில தினங்களாக கொண்டாடி விட்டு தற்போது சென்னை வந்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் கத்தி பட வேலைகளில் உற்சாகத்தோடு இறங்கியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி