இப்படத்தினைப் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ வில்லன் சுதீப் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் ஸ்ரீதேவி ராணியாக நடிக்க இருக்கிறாராம்.
அவரை காப்பாற்றும் போர் வீரனாக விஜய்யும், விஜய்க்கு குருவாக சுதீப்பும் நடிக்க இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், நட்ராஜ் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி