இதுவரை ரஜினிகாந்த் ஏழே ஏழு பதிவை மட்டுமே போட்டிருக்கிறார். அவையும் குறிப்பிடும்படியான பதிவாக இல்லை. அவை வெறும், நன்றியும், வாழ்த்தையும் சொன்ன பதிவுகள் மட்டுமே. கோச்சடையான் படம் வெளிவந்ததும் அந்த படத்தைப் பற்றிய பல தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவையும் வரவில்லை, அடுத்து அவர் நடிக்க ஆரம்பித்துள்ள லிங்கா படத்தைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை இடம் பெறவில்லை.இந்தித் திரையுலகில் சமூக வலைத்தளங்களில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் ஒரே நடிகர் அமிதாப்பச்சன் மட்டுமே. தினமும் ஏதாவது ஒரு செய்தியையோ, கருத்தையோ அவர் பதிவிடுவது வழக்கம். ரஜினிகாந்தும் அப்படி ஏதாவது செய்து ரசிகர்களை மட்டுமல்லாது, மற்ற மக்களையும் கவர்வார் என ஊடகங்களும் எதிர்பார்த்தன.
ஆனால், அப்படியெல்லாம் எதுவுமே நடக்காமல் போய்விட்டது.ரஜினிகாந்தின் இந்த மௌனத்திற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. பலரும் கோச்சடையான் படத்தை விளம்பரப்படுத்துவதற்காகத்தான் ரஜினி இப்படி ஒரு விஷயத்தை செய்தார் என்கிறார்கள். ஆனால், படத்தைப் பற்றிக் கூட அவர் பெரிதாக எந்த கருத்தையும் பதிவிடவில்லை. தற்போது ரஜினிகாந்தின் டுவிட்டர் கணக்கை தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிவிட்டது. கடைசியாக கோச்சடையான் வெளியான அன்றுதான் படத்தை வாழ்த்தி ஒரு பதிவு போட்டிருக்கிறார். ஏறக்குறைய மூன்று வாரங்களாக எந்தவிதமான பதிவும் அவருடைய டுவிட்டர் கணக்கில் பதிவிடப்படவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி