அந்த வகையில், திருமணத்திற்கு பிறகு ஹரிதாஸ் என்ற படத்தில் நடித்த சினேகா, தற்போது பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்துள்ள உன் சமையலறையில் என்ற படத்தில் கதாநாயகியாகவே நடித்திருக்கிறார். இப்படி அவர் திருமணத்திற்கு பிறகு நடித்த இரண்டு படங்களிலுமே அவருக்கு மெச்சூரிட்டியான வேடங்கள். அதோடு பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நட்புக்காக ஒரு வேடத்தில் நடித்தார் சினேகா.இதற்கிடையே, தனது கணவர் பிரசன்னாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோதும், முன்பு போலவே பரவலாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் சினேகா தனது அபிமான டைரக்டர்களிடமும் தனக்கேற்ற வேடங்கள் தருமாறு வேண்டுகோள் வைத்து வருகிறார்.
ஆனால், அப்படி தனக்கு தரும் கேரக்டர்கள் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். முககியமாக கவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க வைத்து குடும்பத்தில் குண்டு வைத்து விடாதீர்கள் என்றும் பர்சனலாக கேட்டுக்கொண்டு வருகிறார் சினேகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி