சென்னை:-கௌதம்மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக அஜீத் மலேஷியா புறப்பட்டுச் சென்றார். அவருடைய 55 வது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.
இப்படத்தில் அஜீத் நடிக்கும் கேரக்டரான சத்யாவையே இப்படத்தின் தலைப்பாக வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சென்னையில் 75 சதவிகித படப்பிடிப்பு நிறைவுற்றநிலையில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க திட்டமிட்டார் இயக்குநர் கௌதம் மேனன். கிளைமாக்ஸ் காட்சியை சென்னையில் எடுத்தால் அது பற்றிய தகவல் வெளியே கசிந்து மீடியாக்களில் செய்தியாகிவிடும்.
அது படத்துக்கு நல்லதல்ல என்று நினைத்தாராம் அஜீத். இது பற்றி இயக்குநருடன் கலந்து பேசிய பிறகு மலேஷியாவில் கிளைமாக்ஸ் காட்சியை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்படி கௌதம்மேனன் தலைமையிலான படக்குழு மலேஷியா புறப்பட்டுச் சென்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி