சென்னை:-ஜெயராம் நடிக்கும் மலையாள படமொன்றில் புதுமுக நடிகை ஜோதி நடித்து வருகிறார். படபிடிப்புக்காக ஓட்டல் அறையில் தங்கி இருந்தபோது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஷாஜி தனது அறைக்குள் புகுந்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மலையாள நடிகர்கள் சங்கத்திலும் புகார் அளித்தார். இருவரிடமும் சங்க நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து சினிமாவில் இருந்து ஷாஜி 6 மாதத்துக்கு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான நடவடிக்கையை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், கேரள சினிமா தொழிலாளர் சங்கம் போன்றவை இணைந்து எடுத்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி