தானே:-தானே கிஷான் நகரை சேர்ந்த 5 வயது சிறுமி கிஷோரி அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏதோ சில பொருட்கள் மினுங்குவதை பார்த்தாள்.
பின்னர், அதை வெளியே எடுத்து சாக்லெட் என நினைத்து வாயில் போட்டு விழுங்கினாள். வீட்டுக்கு சென்றதும், சிறுமியின் உடல்நிலை மோசமானது. பதறிப்போன பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். மருத்துவ பரிசோதனையில், சிறுமி சாக்லெட் என நினைத்து துப்பாக்கி தோட்டாக்களை விழுங்கியது தெரியவந்தது.
பின்னர் டாக்டர்கள் நீண்ட நேரம் போராடி, துப்பாக்கி தோட்டாக்களை சிறுமியின் வயிற்றில் இருந்து அகற்றினார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி