பேஸ்புக் மாதிரியில் தயாராகி இருந்த அந்த மலரின் மற்றொரு உள்பக்கத்தில், எதிர்மறை முகங்கள் என்ற தலைப்பின் கீழ் பிரபல சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன், தீவிரவாதிகள் அஜ்மல் கசாப், பின்லேடன், சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோரது படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகள் மற்றும் சர்வாதிகாரிகளின் படங்களுடன் பிரதமர் படம் வெளியான சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் மற்றும் மலர் வெளியீட்டாளர்களுக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லூரி ஆண்டு விழா சிறப்பு மலரை தீவைத்து எரித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை தவறாக பிரசுரித்த கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் குளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அரசு கல்லூரி முதல்வர், மாணவர் மலர் ஆசிரியர் உள்பட 7 பேர் மீது குன்னம் குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி