சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனைப் பற்றிய அவரது அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். எதையும் முகத்திற்கு நேராகப் பேசும் குணம் கமல்ஹாசனுக்குக் கிடையாது என அவர் சொல்லியிருக்கிறார். கமல்ஹாசன் பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனா இருப்பவர். எவ்வளவோ விதமான தகவல்களை அவர் மூளையில வச்சிருப்பாரு. அதெல்லாம் கம்பயூட்டர்ல கூட இருக்குமாங்கறது சந்தேகம்தான். புதுசு புதுசா பல விஷயங்களை கத்துக்கிட்டேயிருப்பாரு. இவ்வளவு விஷயங்களை கத்துக்கிட்டு என்ன பண்ணுவாருன்னு நமக்கு தோணும். ஆனால், அப்படிப்பட்ட தேடல்தான் அவரை உயிர்ப்போட வச்சிருக்கு.
நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்டுவாரு, ஆனால், முகத்துக்கு நேரா எதையுமே பாராட்ட மாட்டாரு. நான் அவர் கூட பல படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். ஆனால், பாராட்டியதே கிடையாது. ஒரு முறை ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தோட டப்பிங்குக்காக போயிருந்தேன். ஆனால், ‘டப்பிங்’ பேசறதப் பத்தி அவர் கண்டுக்கவே இல்லை. அப்புறம்தான் தெரிஞ்சது, அவர் மிஷ்கினைப் பத்திப் பாராட்டிப் பேசத்தான் என்னைக் கூப்பிட்டிருக்காருன்னு. மிஷ்கின் இயக்கத்துல வந்த ‘நந்தலாலா’ படத்தைப் பத்தி பாராட்டிக்கிட்டே இருந்தாரு. ஒருத்தரைப் பத்தி அவங்க கிட்ட பாராட்டாம, அடுத்தவங்க கிட்ட பாராட்டறதுதான் கமல்ஹாசனோட பாணி,என்றார் ரோகிணி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி