புதுடெல்லி:-புனித நதி என்ற பெயர் கங்கை நதிக்கு உண்டு. ஆனால் அதன் புனிதத்தன்மைக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதில் குப்பைகள் கொட்டுகின்றனர். எச்சில் துப்புகின்றனர்.இந்நிலையில் கங்கை நதியின் புனிதத்தன்மையைக் காக்கிற வகையில் அதைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
மத்திய நீர்வளத்துறை மந்திரியாக பதவி ஏற்றுள்ள பாரதீய ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி, கங்கையை சுத்தம் செய்ய சபதம் எடுத்துள்ளார். அந்த வகையில் கங்கையில் யாராவது எச்சில் துப்பினால் அவர்களைப் பிடித்து ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறைத்தண்டனை விதிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதேபோன்று கங்கையில் குப்பைகளைக் கொட்டவும் தடை விதிப்பது குறித்து ஆராயப்படுகிறது. உமாபாரதி உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மத்திய அரசு 25,000 கிமீ உள்நாட்டு நீர்வழிகள் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி