மும்பை:-இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் மட்டும் அல்லாமல், இந்தி திரையுலகிலும் சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இந்தியில் இவர் இயக்கிய ‘ஹாலிடே’ திரைப்படத்தில் நடிகை சோனாக்ஷி சின்கா கதாநாயகியாக நடித்தார்.
இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் நடிகை சோனாக்ஷி சின்கா தான் கதாநாயகி. இதற்கான படப்பிடிப்பு வருகிற நவம்பரில் தொடங்கி 3 மாதம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில், நடிகை சோனாக்ஷி சின்கா, கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.
பெரும்பாலான காட்சிகளில் தன்னை ஒரு வீரமிக்க பெண்ணாக காட்டி கொள்கிறார். இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,இந்த திரைப்படம் இந்திய பெண்களுக்கு வலிமைமிக்க செய்தியை அளிக்கும்.என்று குறிப்பிட்டு உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி