நியூயார்க்:-கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் உலகில் 15வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 1.75 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாக பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியா 16வது இடத்தில் இருந்தது. 2018ம் ஆண்டுக்குள் உலக பணக்காரர்கள் நாடுகளில் இந்தியா 7வது இடத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை இந்த ஆய்வு காட்டுகிறது.
இந்தியாவின் உள் நாட்டு உற்பத்தி கடந்த ஜனவரி , மார்ச் மாதங்களில் 5.3 ஆக இருந்தது. இது கடந்த 9 ஆண்டுகளில் மிக குறைவான அளவு அமெரிக்கா 71 கோடீஸ்வரர்களுடன் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் 1.63 கோடி கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது 2012ம் ஆண்டை விட 1.1 சதவீதம் அதிகம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி