விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 24 வயதான டேனியல் ரிச்சியர்டோ (ரெட்புல் அணி) 1 மணி 39 நிமிடம் 12.830 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதன் மூலம் பார்முலா-1 பந்தயத்தில் வெற்றி கண்ட 4-வது ஆஸ்திரேலியர் என்ற பெருமையை பெற்றார்.புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வரும் ஜெர்மனி வீரர் நிகோ ரோஸ்பெர்க் (மெர்சிடஸ்) 4.2 வினாடி பின்தங்கியதால் 2-வது இடத்துடன் திருப்திபட வேண்டியதானது. 2-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் விலக நேர்ந்தது.
கடைசி கட்டத்தில் பெலிப் மாசா (பிரேசில்), போர்ஸ் இந்தியா வீரர் செர்ஜி பெரேஸ் ஆகியோரின் கார்கள் பயங்கரமாக மோதியதில் இருவரும் காயமின்றி தப்பினார்கள். முன்னாள் சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (ரெட்புல்) டேனியலை விட 5.2 வினாடி பின்தங்கிய நிலையில் பந்தய தூரத்தை கடந்து 3-வது இடம் பெற்றார்.
போர்ஸ் இந்தியா வீரர் நிகோ ஹூல்கென்பெர்க் 5-வது இடத்தை பிடித்தார். 7-வது சுற்றுகள் முடிவில் ஜெர்மனி வீரர் நிகோ ரோஸ்பெர்க் (மெர்சிடஸ்) 140 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) 118 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டேனியர் ரிச்சியர்டோ (ரெட்புல்) 79 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். பார்முலா-1 கார் பந்தயத்தின் 8-வது சுற்று பந்தயம் ஆஸ்திரியாவில் வருகிற 22ம் தேதி நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி