இந்நிலையில் பாட்ஷா கதையுடன் ஒத்துப்போவதுபோல் இன்னொரு விஷயமும் அஞ்சான் படத்தில் இருக்கிறது. பாட்ஷா படத்தில் – ஆட்டோ டிரைவர் பாட்ஷாவின் ப்ளாஷ்பேக்கில் மும்பையில் மாணிக் பாட்ஷா என்ற தாதாவாக இருப்பார் ரஜினி. பாட்ஷா படம் போலவே அஞ்சான் படத்தின் கதையும் இருக்கிறது. இதில் மும்பை எபிஸோடில் ராஜூ பாய் என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் சூர்யா.
அவருக்கு ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. அந்த ப்ளாஷ்பேக்கில் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் சிக்கந்தர். அதாவது முஸ்லீம் இளைஞனாக நடிக்கிறார். இந்த சிக்கந்தர்தான் மும்பையில் ராஜூ பாய் என்ற பெயரில் வாழ்கிறார். அஞ்சான் படத்தில் சிக்கந்தர் என்ற கதாபாத்திரமும் பவர்ஃபுல்லாக இருக்குமாம். எனவேதான் அஞ்சான் படத்தின் தெலுங்கு டப்பிங்குக்கு சிக்கந்தர் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி