அதையொட்டி இங்கிலாந்தில் வாழும் சீக்கியர்கள் லண்டனில் லெய்சர்ஸ் பகுதியில் உள்ள காந்திசிலை முன்பு குவிந்தனர். அங்கு பொற்கோவிலில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். 1984ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும் என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர்.போராட்டம் நடந்தபோது திடீரென ஆவேசம் அடைந்த சிலர் அங்கிருந்த வெண்கலத்தினால் ஆன காந்தி சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஒரு கிரிமினல் வழக்காக கருதப்படும் என்றும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படியும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கிடையே காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு லெய்செல்பர் கிழக்கு எம்.பி. கெய்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த இழிச்செயலை ஒருவரோ அல்லது பலர் சேர்ந்து கும்பலாக செய்திருந்தாலோ அது முட்டாள் தனமானது. மேலும் கீழ்த்தரமானது. மனிதாபிமானமற்ற செயல் காந்தி இந்தியாவுக்கு மட்டுமின்றி லெஸ்செல்டருக்கும் பாரம்பரிய சொத்து ஆவார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி