அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் அரும்பியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். இவர்களின் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.அதைத்தொடர்ந்து அமலாபால்-விஜய் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, அமலாபாலின் சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. கொச்சி ஆலுவா என்ற இடத்தில் உள்ள புனித ஜூட் கிறிஸ்தவ ஆலயத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது, அமலாபால்-விஜய் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.
மணமக்களை உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தினார்கள். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா, சரண்யா பொன்வண்ணன், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார், அவருடைய மனைவியும், பாடகியுமான சைந்தவி ஆகியோர் கலந்துகொண்டு அமலாபால்-விஜய் ஜோடியை வாழ்த்தினார்கள்.அனைவரையும் பட அதிபர் ஏ.எல்.அழகப்பன், நடிகர் உதயா ஆகிய இருவரும் வரவேற்றார்கள். அதைத்தொடர்ந்து நெடுமஞ்சேரி என்ற இடத்தில் மலையாள முறைப்படி, ‘சங்கீத்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமான மலையாள திரையுலக கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி