இந்த சீட்டுக்கம்பெனியில் முன்னால் போலீஸ் அதிகாரியான நிழல்கள் ரவியும், காதல் தண்டபாணியும் நாயகியின் மாமாவிடம் கூட்டாக சேருகிறார்கள். பாபு இவர்களை நம்பி நிறைய பேரை சீட்டுக் கம்பெனியில் சேர்ந்துவிடுகிறார். குறிப்பிட்ட ஆறு மாதத்தில் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பித்தர மறுக்கிறார் நாயகியின் மாமா. இதனால் சீட்டுக்கம்பெனியில் சேர்ந்தவர்கள் பாபுவிடம் பணம் கேட்க ஆரம்பிக்கிறார்கள். இதனை சமாளிக்க தன் தங்கை திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகைகளை வைத்து சிலருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கிறார்.பணத்தை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்கிறார்கள், பணத்தை கொடுங்கள் என்று நாயகியின் மாமாவிடம் பாபு கேட்க, அதற்கு அவர் இன்னும் இரண்டு மாதத்தில் தருகிறேன் என்று கூறுகிறார். ஆனால் வாடிக்கையாளர்களோ அதை ஏற்றுக் கொள்ளாமல் பாபுவை சித்ரவதை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
தன் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து மறுபடியும் சிலருக்கு பணத்தைக் கொடுக்கிறார். மேலும் வாடிக்கையாளர்களின் சித்ரவதையால் தன் தாய் மற்றும் தங்கை இழக்க நேரிடுகிறது. இதனால் கோபமும் மனவேதனையும் அடைகிறார்.இதற்கிடையில் நாயகியின் மாமா காதல் தண்டபாணி, நிழல்கள் ரவி ஆகியோர் மக்களிடம் வாங்கிய பணத்தை ஏமாற்றி பங்கு பிரித்துக் கொள்ள நினைக்கிறார்கள். மேலும் நாயகியை காதல் தண்டபானிக்கும், நிழல்கள் ரவிக்கும் பலிகாடாக்க திட்டம் தீட்டுகிறார் நாயகியின் மாமா. ஒரு பக்கம் பணத்தைக் கொடுத்தவர்கள் பாபு மீது போலீசில் புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் பாபுவும், ஜோத்தத்தாவும் ஊரை விட்டு ஒகேனக்கல் பகுதிக்குச் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு கும்பல் இவர்களை வழிமறித்து சண்டையில் ஈடுபடுகிறார்கள். இவர்களை அடித்து விட்டு தப்பித்து ஒகேனக்கல் பகுதிக்கு செல்கிறார்கள். அடிப்பட்ட கும்பல் இவர்களை பழிவாங்க முடிவுசெய்கிறார்கள்.இறுதியில் போலீஸ் பாபுவை பிடித்தார்களா? அந்த கும்பலிடம் பாபுவும் ஜோத்தத்தாவும் மாட்டிக்கொண்டார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் பாபு படத்தில் காதல், நடனம், சண்டை, அழுகை, சோகம், தவிப்பு என தன் நடிப்பு திறமையை வெளிக்காட்ட முயற்சி செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் இவருடைய நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. நாயகி ஜோத்தத்தா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.நிழல்கள் ரவி, காதல் தண்டபாணி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்திற்கு கூடுதல் பலம் நளினியின் நடிப்பு. இவருடைய பாசமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். மேலும் படத்தில் பத்மநாபன், லதாராவ், டெல்லி கணேஷ், கராத்தே ராஜா, ஆனந்த், அருள்மணி, முத்துக்காளை, கிரேன் மனோகர், பிளாக் பாண்டி, காந்தராஜ், தீப்பெட்டி கணேசன் ஆகியோரும் இருந்தாலும் அவர்களுக்கு அதிக வேலை இல்லை.
சரண் பிரகாசின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பி.ஜி.வெற்றியின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளை மட்டுமே ரசிக்கலாம். கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.ஒகேனக்கல்லில் நடந்த நிஜ சம்பவத்தை எடுத்துக் கொண்ட இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி நாட்டில் நடக்கும் சீட்டுக் கம்பெனி மோசடியும் அதனால் குடும்பங்கள் எப்படி பாதிப்புக்கு என்பதையும் காதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார். தேவையற்ற காட்சிகள், தேவையில்லாத இடத்தில் பாடல்களை தவிர்த்திருக்கலாம். மேலும் நடிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் விட்டிருப்பது படத்திற்கு பலவீனம்.
மொத்தத்தில் ‘ஒகேனக்கல்’ பாடம்……
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி